அசுர பலத்துடன் ஸ்பெயின் அணி... 5 வருடங்களில் 16 வெற்றிக் கிண்ணங்கள்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெர்லினில் ஐரோப்பிய சேம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி, நியூ ஜெர்சியில் நடந்த உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தற்போது உலக சேம்பியன் பட்டம் வென்றுள்ளது.
16 பட்டங்கள்
யூரோ கிண்ணம் 2008-ஐ வென்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2010-ல் அவர்கள் அதே சாதனையைப் படைத்தனர். ஸ்பெயினின் இந்தச் சமீபத்திய வெற்றி, ஆண்கள் மற்றும் மகளிர் விளையாட்டில் அவர்களின் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்துகிறது.

ஆண்கள் மற்றும் மகளிர் உலகக் கிண்ணங்களை ஒரே நேரத்தில் வென்ற முதல் நாடும் இவர்களே – 2023-ல் சிட்னியில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி இங்கிலாந்தை வீழ்த்தியது.
மட்டுமின்றி, ஆண்கள் அணி 2023-இல் நேஷன்ஸ் லீக் மற்றும் 2024 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்றனர்; அதேவேளையில், மகளிர் அணி 2024 மற்றும் 2025 ஆகிய இரு ஆண்டுகளிலும் நேஷன்ஸ் லீக் பட்டத்தை வென்றனர்.
உண்மையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஸ்பெயின் கால்பந்து அணி 17 வயதுக்குட்பட்டோர் முதல் சீனியர் நிலை வரை வியக்கத்தக்க வகையில் உலகக் கிண்ணம் உட்பட 16 பட்டங்களை வென்றுள்ளது.
கடந்த 2022 முதல் 2026 வரையில் ஸ்பெயின் மகளிர் கால்பந்து அணி மட்டும் 11 பட்டங்களை வென்றுள்ளது. இதில், 20 வயதுக்கு உட்பட்டவர்கள் அணி 2022ல் உலகக் கிண்ணம் வென்றுள்ளது.

38 ஆட்டங்களில்
19 வயதுக்கு உட்பட்டவர்களின் அணி 5 முறை ஐரோப்பிய சேம்பியன்கள் பட்டம் வென்றுள்ளது. 17 வயதுக்கு உட்பட்டவர்கள் அணி கடந்த 2022ல் உலகக் கிண்ணம் வென்றதுடன், 2024ல் ஐரோப்பிய சேம்பியன்கள் பட்டம் வென்றுள்ளது.
ஆண்கள் கால்பந்து அணி கடந்த 2022 முதல் 2026 வரையில் 5 பட்டங்களை வென்றுள்ளது. இதில் ஆண்கள் சீனியர் அணி 2026ல் உலகக் கிண்ணம், 2024ல் ஐரோப்பிய சேம்பியன்கள் பட்டம், 2023ல் நேஷன்ஸ் லீக் பட்டம் வென்றுள்ளது.

23 வயதுக்கு உட்பட்டவர்கள் அணி 2024ல் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்றனர். 19 வயதுக்கு உட்பட்டவர்கள் அணி 2026ல் ஐரோப்பிய சேம்பியன்கள் பட்டம் வென்றுள்ளது.
ஸ்பெயின் அணி அனைத்துப் போட்டிகளிலும் சேர்த்துத் தொடர்ந்து 38 ஆட்டங்களில் தோல்வியைச் சந்திக்காமல் உள்ளது; இது வரலாற்றிலேயே ஐரோப்பிய அல்லது தென் அமெரிக்க அணி ஒன்று பதிவு செய்துள்ள மிக நீண்ட தொடர் வெற்றியாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |