ஸ்பெயினில் கடலுக்கு இழுத்து செல்லப்பட்ட பிரித்தானியர்: இறுதியில் காத்திருந்த சோகம்!
ஸ்பெயினில் கடலில் மூழ்கி பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய சுற்றுலா பயணி உயிரிழப்பு
ஸ்பெயினின் டெனெரிஃப் தீவில் உள்ள இயற்கை குளத்தில் நீந்திக் கொண்டிருந்த போது கடலில் இழுத்துச் செல்லப்பட்டதால் 63 வயது பிரித்தானிய ஆண் சுற்றுலா பயணி துயரகரமாக உயிரிழந்தார்.
தீவின் மேற்குப் பகுதியில் உள்ள பிரபலமான இயற்கை குளமான லோஸ் ஜிகாண்டஸில்(Los Gigantes) நீரில் சிக்கிய மூன்று பேரில் இவரும் ஒருவர் என தெரியவந்துள்ளது.
அறிக்கைகளின்படி, பெரிய அலை எதிர்பாராத விதமாக இரண்டு பெண்களையும் சேர்த்து மூன்று பேரை, கடலுக்குள் இழுத்துச் சென்றது. பெண்கள் இருவரும் பாதுகாப்பாக கரைக்கு திரும்பிய போதிலும், அந்த ஆண் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
உயிரிழப்பு மூச்சுத்திணறல் காரணமாக ஏற்பட்டதா அல்லது சம்பவத்தின் போது ஏற்பட்ட தாக்கங்கள் காரணமாக ஏற்பட்டதா என்பதை பிரேத பரிசோதனை ஆய்வு செய்து மரணத்திற்கான காரணம் தீர்மானிக்கப்படும் என்று உள்ளூர் சிவில் காவல் அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில், உயிரிழந்த பிரித்தானிய சுற்றுலா பயணியின் குடும்பத்திற்கு உதவி வழங்குவதாக வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் இது தொடர்பான நடவடிக்கைக்கு உள்ளூர் அதிகாரிகளுடன் தீவிரமாக தொடர்பு கொண்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |