உதட்டு முத்த சர்ச்சை: பதவி விலகும் வரை விளையாடமாட்டோம்! ஸ்பெயின் வீராங்கனைகள் தடாலடி
ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் பதவி விலகும் வரை விளையாட மாட்டோம் என மகளிர் அணி வீராங்கனைகள் அறிவித்துள்ளனர்.
உதட்டு முத்தம் கொடுத்த தலைவர்
மகளிர் உலகக்கோப்பையை ஸ்பெயின் வென்ற பின், ஸ்பானிஷ் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் நட்சத்திர வீராங்கனை ஜென்னி ஹெர்மோசோவின் உதட்டில் முத்தமிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜென்னி சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் இந்த விடயம் பெரும் சர்ச்சையானது.
இதனைத் தொடர்ந்து, லூயிஸ் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியதுடன் ஜென்னியின் சம்மதத்துடன் தான் முத்தம் கொடுத்ததாகவும் தெரிவித்தார். ஆனால் வீராங்கனை ஜென்னி ஹெர்மோசா இந்த கூற்றை அதிரடியாக மறுத்தார்.
DAVID GRAY / AFP
பதவி விலக வேண்டும்
ஸ்பெயின் நட்சத்திர வீராங்கனைக்கு கட்டாய முத்தம் கொடுத்ததால் லூயிஸ் பதவி விலக வேண்டும் என கண்டனம் எழுந்தது.
Getty
லூயிஸ் பதவி விலக மறுத்துள்ளார். இது வீராங்கனைகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் பதவியில் இருந்து லூயிஸ் ரூபியேல்ஸ் நீக்கப்படாத வரை, நாங்கள் விளையாடப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |