போட்டியை நடத்தும் பிரான்ஸை வீழ்த்தி தங்கம் வென்ற ஸ்பெயின்! 32 ஆண்டுகளுக்கு பின் சாதனை
பாரீஸ் ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் அணி தங்கம் வென்று சாதனை படைத்தது.
Parc des Princes மைதானத்தில் நடந்த ஒலிம்பிக் 2024 கால்பந்து போட்டியில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின.
மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்பெயின் வீரர்கள் வெற்றிக்கு வித்திட்டனர்.
பரபரப்பாக நடந்த இப்போட்டியில் ஸ்பெயின் 5-3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது.
இதன்மூலம் 32 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் ஸ்பெயின் அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
ஸ்பெயின் இதற்கு முன்னர் 1992ஆம் ஆண்டு பார்சிலோனாவில் நடந்த ஒலிம்பிக்கில் போலந்தை வீழ்த்தி தங்கம் வென்றது.
?? ???? ????! Spain are 1-3 up in Paris
— Spanish Football (@SpainIsFootball) August 9, 2024
Great first half! Let's keep it up in the second half.
????? | 1-3 | 45'#UnSueñoCompartido | #Paris2024 pic.twitter.com/7dHfTN637Z
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |