தவறுதலாக முன்கூட்டியே வெளியானது ஹரியின் ‘Spare’ புத்தகம்: லீக்கான தகவல்கள்...
பிரித்தானிய இளவரசர் ஹரி எழுதியுள்ள ‘Spare’ என்னும் புத்தகம் அடுத்த செவ்வாய்க்கிழமை, அதாவது ஜனவரி மாதம் 10ஆம் திகதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தவறுதலாக முன்கூட்டியே வெளியானது ஹரியின் ‘Spare’
இந்நிலையில், அந்த புத்தகத்தின் ஸ்பெயின் மொழியாக்கம் ஏற்கனவே வெளியாகிவிட்டது தற்போது தெரியவந்துள்ளது. அந்த புத்தகம் பிரித்தானியாவிலும், ராஜ குடும்பத்திலும் பெரும் புயலை உருவாக்கியுள்ள நிலையில், அதன் முக்கியத்துவம் குறித்து எதுவும் தெரியாமலே சர்வசாதாரணமாக அதை விற்கத்துவங்கிவிட்டனர் ஸ்பெயின் நாட்டவர்கள்.
அந்த புத்தகங்களில் இரண்டை 24 டொலர்களுக்கு வாங்கியுள்ள ஒருவர், இந்த புத்தகத்தின் மதிப்பு குறித்து தெரியாமலே ஸ்பெயின் நாட்டில் அதை விற்கத்துவங்கிவிட்டார்கள், ஏதோ தவறு நடந்திருக்கலாம் என கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
image - REUTERS
ஸ்பெயின் மொழியில் ஹரியின் ‘Spare’
ஸ்பெயின் மொழியில் ஹரியின் ‘Spare’ புத்தகம் ‘En La Sombra’ அதாவது ’நிழலில்’ என்ற பொருளில் அழைக்கப்படுகிறது.
அதில், ’Para Meg, Archie y Lili… y, for supuesto, mi madre’ அதாவது, இந்த புத்தகம் மேகன், ஆர்ச்சி மற்றும் லில்லி அத்துடன் என் தாய்க்கு சமர்ப்பணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட விடயங்கள்தான் தற்போது பிரித்தானிய ஊடகங்களில் முன்கூட்டியே செய்திகளாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
AFP via Getty Images