49 வயதில் பிரபல நடிகர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
அமெரிக்க தொடர் ஸ்பார்டகஸ் நடிகர் புற்றுநோயால் மரணம்
49 வயதில் மரணமடைந்த ஐயோன் ஜான் கிங்கிற்கு சக நடிகர்கள், ரசிகர்கள் அஞ்சலி
புகழ்பெற்ற ஸ்பார்டகஸ் சீரிஸ் நடிகர் ஐயோன் ஜான் கிங் புற்றுநோயால் மரணமடைந்தார். அமெரிக்காவில் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர் ஸ்பார்டகஸ். இதில் நடித்து புகழ்பெற்றவர் ஐயோன் ஜான் கிங்.
நியூசிலாந்து நடிகரான இவருக்கு அடினோகார்சினோமா புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்ட நிலையில், கணையம் மற்றும் பிற உறுப்புகளுக்கு புற்றுநோய் வேகமாக பரவியது.
Credit: Starz
அவரது சிகிச்சைக்காக ஜானின் குடும்பத்தினர் இணையத்தில் நிதி திரட்ட தொடங்கினர். இந்த நிலையில் புற்றுநோய் பாதிப்பால் ஜான் கிங் தனது 49வது வயதில் உயிரிழந்துள்ளார். அவரது மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Picture: givealittle.co.nz
அற்புதமான கணவனாக, தந்தையாக, மகனாக, சகோதரனாக, நண்பனாக, மனிதனாக இருந்த ஜான் இந்த உலகில் ஒரு பெரிய துளையை விட்டுச் செல்கிறார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Credit: Spartan's Greatest Battle