இலங்கை ஜனாதிபதி தேர்தல் : விசேட பேருந்து சேவை ஆரம்பம்
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (21) பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன, பயணிகள் உரிய நேரத்தில் தமது இலக்குகளை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக அதிகாலையில் வருமாறு கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் 3,300 பஸ்களும் இன்று சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிகாலை 7 மணிக்கு தொடங்கியுள்ள இந்த தேர்தல் வாக்கு பதிவானது மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் மொத்தம் 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
நாளை அதிகாலை முதல் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்குச் செல்லும் மக்களுக்காக இன்று விஷேட பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |