Viral Video: விமானத்தில் தீபாவளி கொண்டாட்டம்
Special Diwali Celebration On Flight: விமானத்தில் மொபைல்போன்களின் Torchlightயை ஆன் செய்து தீபாவளியை பைலட் பிரதீப் கிருஷ்ணனுடன் கொண்டாடியுள்ளனர் பயணிகள்.
தீபாவளி பண்டிகை என்றாலே கொண்டாட்டம் தான், வண்ணமயமான பட்டாசுகள், தித்திப்பான இனிப்புகள், நண்பர்களுடன் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டங்கள் களைகட்டும்.
இதை இன்னும் சிறப்பாக்கியுள்ளார் பைலட் பிரதீப் கிருஷ்ணன், விமானத்தில் பயணித்த பயணிகளுடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடியுள்ளார்.
இதுகுறித்த வீடியோவை பகிர்ந்துள்ள பிரதீப் கிருஷ்ணன், தீபாவளியின் கொண்டாட்டங்கள் பற்றி பேசி அனைவரையும் அதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கிறார்.
தொடர்ந்து அனைவரையும் மொபைல் போனின் Torchlightயை ஆன் செய்து தீபாவளியை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறார்.
உடனடியாக பயணிகள் அனைவரும் Torchlightயை ஆன் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த அந்த தருணமே மறக்கமுடியாததாகி விட்டது.
