இலங்கையின் புனிதபல்லின் சிறப்பு கண்காட்சி; சித்திரை புத்தாண்டின் புதிய ஏற்பாடு
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குப் பிறகு பொதுமக்களுக்காக புனித தந்தத்தின் சிறப்பு கண்காட்சி நடத்தப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல்கள் நேற்று (23) மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களுடன் நடைபெற்றதாக கூறினார்.
புனித பல்லின் சிறப்பு கண்காட்சி
மேலும், மத்திய மாகாண ஆளுநர், கண்டி மாவட்ட செயலாளர், பிற அரசு அதிகாரிகள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க புனித தந்ததா மாளிகையின் தியவதன நிலமே ஆகியோரின் பங்கேற்புடன் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் குறித்து உடன்பாடு எட்டப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி திசாநாயக்க நேற்று (23) காலை கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித தலதா மாளிகைக்கு விஜயம் செய்து, அங்கு தலதா மாளிகைக்கு வழிபாடு நடத்தி ஆசீர்வாதங்களைப் பெற்றிருந்தார்.
பின்னர் அவர் மல்வத்து மகா விஹாரைக்குச் சென்று, மல்வத்து பீடத்தின் தலைமை பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரைச் சந்தித்தார்.
பின் ஜனாதிபதி அஸ்கிரிய மகா விஹாரைக்குச் சென்று, அஸ்கிரிய பீடத்தின் பிரதம தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்தார். அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர்கள் உட்பட மூத்த பிக்குகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர், மேலும் மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கு ஆசீர்வாதம் வேண்டி பிரித் ஓதியுள்ளனர்.
பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று உறுதியளித்தார்.
பாதாள உலகக் குழுக்களிடையே மோதல்கள் இருந்தாலும், அவை பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தாது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
அரசியல் பாதுகாப்பின் கீழ் செழித்து வளர்ந்த திட்டமிட்ட குற்றங்களை முற்றிலுமாக ஒழிக்க தற்போதைய அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.
உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தினார். தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதற்கு எந்த சட்டத் தடைகளும் இல்லை என்றும், அரசாங்கம் ஏற்கனவே தேவையான நிதியை ஒதுக்கியுள்ளது என்றும் அவர் உறுதியளித்தார்.
தேர்தல் ஆணையம் விரைவில் தேர்தல் திகதியை அறிவிக்கும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்நிகழ்வில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர்களான கலாநிதி பிரசன்ன குணசேன, கலாநிதி ஹன்சக விஜயமுனி, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜெயசிங்க, தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல பண்டார மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |