சாதாரண தரப் பரீட்சை குறித்து வெளியான விசேட அறிவிப்பு
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
2021ம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பம் செய்யும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.
பரீட்சை திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்திற்குள் பிரவேசித்து பரீட்சைக்காக விண்ணப்பம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் இந்த பரீட்சை நடாத்தப்படவிருந்த போதிலும் கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் பரீட்சை நடாத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் சாதாரண தரப் பரீட்சை நடாத்தப்பட உள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.