செலவை குறைக்க SpiceJet Airlines எடுத்த திடீர் முடிவு.., சோகத்தில் விமான ஊழியர்கள்
செலவை குறைப்பதற்காக SpiceJet விமான நிறுவனம் திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதால் ஊழியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் Indigo 60% வர்த்தக பங்கீட்டையும், Tata தலைமையிலான Air India, Vistara, AirAsia India ஆகியவை 30% வர்த்தக பங்கீட்டையும் கொண்டுள்ளது. மீதியுள்ள 10 சதவீதத்தை SpiceJet மற்றும் Agasa Airlines பங்கு போட்டுக் கொண்டுள்ளன.
இந்தியாவில் முன்பு விட தற்போது விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் Indigo, Air India விமான நிறுவனங்கள் தனது சேவை அளிக்கும் நகரங்களை விரிவாக்கம் செய்வதோடு 400 விமானங்களையும் ஓர்டர் செய்துள்ளது.
இந்த விமானங்களை இயக்க அதிகப்படியான பைலட்களும், பணிப்பெண்களும் தேவையான நிலையில் தான் SpiceJet Airlines ஒரு முடிவு எடுத்துள்ளது.
SpiceJet lay off
SpiceJet நிர்வாகத்தினுடைய முதலீட்டாளர் நம்பிக்கையைக் காப்பாற்ற, செலவின குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக 15 % ஊழியர்களை பணிநீக்கம் செய்ய SpiceJet நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி பார்த்தல் சுமார் 1,400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 9000 ஊழியர்களை கொண்டு 30 விமானங்களை இயக்கி வரும் SpiceJet, 8 விமானங்களை வெளிநாட்டு விமான நிறுவனத்திடம் பைலட் மற்றும் பணிப்பெண்கள் என மொத்த பேரையும் குத்தகை முறையில் இயக்கி வருகிறது.
SpiceJet நிறுவனத்தின் இந்த பணிநீக்கத்தால் ரூ.60 கோடி சம்பள செலவில் சேமிப்பு உருவாகும். தற்போது, முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் ரூ. 2200 கோடி முதலீட்டைத் திரட்டும் முயற்சியில் SpiceJet ஈடுபட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |