கொலஸ்ட்ரால், சர்க்கரை நோயை உங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வர வேண்டுமா? இந்த மசாலா பொருட்களை எடுத்து கொள்ளுங்க விரைவில் பலன் கிடைக்கும்
இன்றைய நவீன உலகத்தில் பலரும் கடைகளில் விற்கப்படும் உணவுகளுக்கு அடிமையாகி விட்டனர். இதனால் 40,50 வயதில் வரும் நோய்கள் இப்போழுதே நம்மை தாக்க தொடங்கிவிடுகின்றது.
குறிப்பாக கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், இதய நோய்கள் இன்று இளவயதினருக்கு கூட வர தொடங்கிவிட்டது.
இதய நோய்கள் மற்றும் நீரிழிவு போன்ற வாழ்க்கை முறை நோய்களைத் தடுக்க மற்றும் கட்டுப்படுத்த நம் பாரம்பரிய மசாலா பொருட்கள் உதவுகின்றன.
தற்போது அவை என்னென்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.
அந்தவகையில் கொலஸ்ட்ரால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் ஒரு சில மசாலா வகைகள் என்னெனன் என்பதை பார்ப்போம்.
- மஞ்சளில் இருக்கும் குர்குமின் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் குறைத்து, நீரிழிவு நோயின் பிற சிக்கல்களைக் கட்டுப்படுத்தும்.
- கருப்பு மிளகு உடலில் காணப்படும் கொழுப்பு செல்களை உடைத்து கொலஸ்ட்ரால் அளவை குறைக்க அலல்து கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
- செரிமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள கிராம்பில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு, கிருமி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி தன்மைகள் நம் உடலின் இன்சுலின் அளவை மேம்படுத்த உதவி, நிரிழிவு நோயின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
- இலவங்கப்பட்டையில் அடங்கி இருக்கும் ஆன்ட்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள், உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் டைப் 2 நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் இலவங்கப்பட்டை சேர்ப்பது அவர்களின் ஆபத்து காரணிகளை குறைக்க உதவும்.
- வெந்தயத்தில் காணப்படும் கரையக்கூடிய அதிக நார்ச்சத்து உடலுக்கு குறைவான கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்ச உதவுகிறது. இது ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ள பொருளாக வெந்தயம் இருக்கிறது.