4 நாட்கள் சிகிச்சை.. சிறிய சிலந்தியால் பிரித்தானியா பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்சனை! பகீர் கிளப்பும் சம்பவம்
லண்டனில் பெண் ஒருவரை சிலந்தி கடித்ததில் மரணத்தின் விளிம்பிற்கு சென்று திரும்பி வந்துள்ளார்.
பிரிட்டனில் வசித்து வருபவர் Iona McNeil(38). இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் Mexico-வுக்கு சுற்றுலா சென்ற நிலையில் அங்கு மலை பகுதிகளுக்கு சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவரை சிறிய சிலந்தி ஒன்று கடித்துள்ளது. ஆனால் அந்த சமயத்தில் அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் சற்று அலட்சியமாக இருந்துவிட்டார்.
Iona McNeil லண்டனுக்கு திரும்பி வந்த பிறகு அவரது உடல்நிலையில் மாறுதல் இருந்துள்ளது. அவர் அடுத்த நாள் தூங்கி எழுந்த போது சிலந்தி கடித்த இடத்தில் பெரிய கொப்பளம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து குமட்டல், வாந்தி, மயக்கம் போன்ற பல அறிகுறிகள் தென்பட்டுள்ளதால் வேறு வழியின்றி மருத்துவரை அணுகினார். மருத்துவமனையில் நான்கு நாள் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.
ஆனால் அவர் உடல் தேறி விடுவார் என மருத்துவர்கள் உறுதி அளித்ததையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலை சீரானது.
இதையடுத்து Iona McNeil கூறியதாவது, நான் உயிர் பிழைப்பேன் என்று கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை.. சின்ன சிலந்தி என்று யாரும் அலட்சியம் காட்ட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.