திடீரென பின்புறமாக தாக்கிய ஸ்பைடர் கமெரா! மைதானத்தில் நிலைதடுமாறி விழுந்த வீரரின் வீடியோ
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் நோர்ட்ஜெவை ஸ்பைடர் கமெரா பின்புறமாக தாக்கியது.
நோர்ட்ஜெவை தாக்கிய கமெரா
மெல்போர்ன் மைதானத்தில் அவுஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் 47வது ஓவரின் போது, தென் ஆப்பிரிக்க அணி வீரர் நோர்ட்ஜெ நடந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக ஸ்பைடர் கமெரா அவரது தோளில் தாக்கியது.
திடீரென கமெரா தாக்கியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் அவருக்கு காயம் ஏற்படவில்லை.
If Jim Ross commentated Anrich Nortje being smashed by Spidercam pic.twitter.com/qpujB0PW2g
— Ethan (@ethanmeldrum_) December 27, 2022
அவுஸ்திரேலிய வாரியம் விளக்கம்
கமெராவை இயக்குபவரின் தவறினால் இந்த சம்பவம் நடந்தது என்றும், 3வது நாளில் கூடுதலாக பாதுகாப்பு அம்சங்களுடன் கமெரா இயக்கப்படும் என்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
நோர்ட்ஜெ இது குறித்து கூறும்போது, வீரர்களின் தலை உயரத்திற்கு ஸ்பைடர் கமெரா பயணிப்பது சரியில்லை என்பது எனது கருத்து. ஜென்சன் உயரமானவர் என்பதால் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என நகைப்பாக தெரிவித்தார்.
@Matta Roberts/CA/Cricket Australia/Getty Images