லண்டன் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! ஸ்பைடர் மேன் உடையில் வந்து நபர் செய்த செயல்: கமெராவில் பதிவான காட்சி

London UnitedKingdom
By Kaviarasan Jul 23, 2021 06:54 PM GMT
Report

லண்டனில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில், ஸ்பைடர் மேன் உடையணிந்த நபர், அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் சிலரை தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் சமீபகாலங்களாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கத்தி குத்து போன்றவை அதிகம் நடைபெறுகிறது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை லண்டனில் இருக்கும் Asda Clapham Junction சூப்பர் மார்க்கெட்டில், இரவு நேரத்தில் ஸ்பைடர் மேன் உடையணிந்து வந்த நபர் திடீரென்று அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் மக்களை தாக்குகிறார். இதில் ஆறு பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

 

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சியில், பெண் ஊழியரை தாக்கும் அந்த நபர், அதன் பின் ஒரு இரும்பு பொருளை கொண்டு அடிக்கிறார். இதில், ஐந்து பேர் லண்டன் ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் சரியாக உள்ளூர் நேரப்படி இரவு 10.40 மணிக்கு நடந்துள்ளது. இது எதனால் நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை, ஆனால் இணையவாசி ஒருவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்த வீடியோவை பதிவிட்டு, அதில், Asda Clapham சூப்பர் மார்க்கெட்டில், முதியவர்கள் மற்றும் குழந்தைகளும் தாக்கும் நபர் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஸ்படைர் மேன் உடையணிந்து வந்து தாக்குவதாக பலர் குறிப்பிட்டிருந்தனர். இந்த சம்பவம் குறித்து, 31 வயது மதிக்கத்தக்க நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி 37 மற்றும் 35 வயது மதிக்கத்தக்க நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், இவர்களைத் தொடர்ந்து 17 மற்றும் 18 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களையும், வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லண்டன் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! ஸ்பைடர் மேன் உடையில் வந்து நபர் செய்த செயல்: கமெராவில் பதிவான காட்சி | Spider Man Attacks Staff In Asda London

சூப்பர் மார்க்கெட்டில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து இரவு 10.40 மணிக்கு பொலிசார் வரவழைக்கப்பட்டனர். இதில், 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மீதம் காயமடைந்த 5 பேர் சம்பவ இடத்திலே சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுவரை ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

லண்டன் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! ஸ்பைடர் மேன் உடையில் வந்து நபர் செய்த செயல்: கமெராவில் பதிவான காட்சி | Spider Man Attacks Staff In Asda London

மேலும், சூப்பர் மார்க்கெட் செய்தி தொடர்பாளர் கூறுகையில், எங்கள் கடையில் வாடிக்கையாளர்களுக்கு இப்படி ஒரு வன்முறை சம்பவம் நடந்ததைக் கண்டு சாதரணமாக விடமாட்டோம்.

பொலிஸ் விசாரணையில் பொலிசாருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பாக யாரேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டார். 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US