சுண்டல், கீரை: சத்தான கட்லெட்..இப்படி செய்து பாருங்க!
கீரைகள் 100க்கும் மேற்பட்ட வகைகளில் உள்ளன. கீரை வகை உணவுகள் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது.
குறிப்பாக கால்சியம், இரும்புச்சத்து, நார்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள், புரதம், போலிக் அமிலம் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
மேலும் சுண்டலில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி, இரும்பு, மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது.
கீரைகளை பொதுவாக குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணமாட்டார்கள் எனவே வித்தியாசமான முறையில் இந்த கீரை சுண்டல் கட்லெட்டை செய்துகொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.மேலும் அவர்களுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
தேவையான பொருள்
- வெள்ளை கொண்டைக் கடலை -200 கிராம்
- கீரை – 1 கட்டு (ஏதேனும் வகை கீரை)
- வெங்காயம் – 100 கிராம்
- உருளைக் கிழங்கு– 150 கிராம்
- உப்பு – தேவையான அளவு
- சீரகம்- ½ ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 6
- எண்ணெய் – 200 கிராம்
செய்முறை
கொண்டைக் கடலையை நன்கு வேகவைக்க வேண்டும்.
பின் அதிலுள்ள தண்ணீரை வடித்து பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
அத்துடன் வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு, நறுக்கிய கீரை, வெங்காயம் சேர்த்து நன்கு பிசையவும்.
இப்போது சிறு சிறு வடிவங்களில் தட்டி கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டை போட்டு எடுக்கவும். அவ்வளவு தான் சுண்டல் கீரை கட்லெட் ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |