சளி, இருமல், கப நோயை ஓட ஓட விரட்டும் கீரை: சித்தர்கள் சொன்ன ரகசியம்
முசுமுசுக்கை கீரை நீங்கள் பார்த்திருக்கிறார்களா? பார்ப்பதற்கு முக்கோண வடிவ இலையில், சிவப்பு நிற பழங்களை கொண்டதுதான் முசுமுசுக்கை கீரை. இக்கீரையை தடவும்போது முசுமுசுவென இருப்பதால் தான் இதற்கு முசுமுசுக்கை கீரை என்று பெயர் வந்தது.
இந்த இலைக்கு மொசுமொசக்கை, மாமூலி, ஆயிலேயம் என்று வேறு பெயர்களும் இருக்கின்றன.
வள்ளலார் சிறப்பித்த 4 மூலிகைகளுள் இந்த முமுசுக்கை ஒன்றாகும். இந்தக் கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. கப நோயை ஓட ஓட விரட்டும் சக்தி கொண்டது இந்த மூலிகை கீரை. மேலும் நம் நுரையீரலுக்கு பாதுகாவலனாகவும் உள்ளது.
சரி... இந்த முசுமுசுக்கை கீரை பற்றியும், அதன் சக்தியைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்
1. முசுமுசுக்கை இலையில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் சி போன்ற எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன.
2. இதன் இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நம் நுரையீரலில் தேங்கியுள்ள சளியை அறவே நீக்கிவிடும்.
3. மூச்சுக் குழாயில் ஏற்படும் நோய் தொற்றுக்கு இதன் இலை மருந்தாக பயன்படுகிறது.
4. குறட்டை மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வை கொடுக்கிறது.
5. இதன் இலைச்சாற்றை எடுத்து, நல்லெண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் இளநரை கட்டுப்படும்.
6. இக்கீரையை அடிக்கடி உணவில் பயன்படுத்தி வந்தால் உடல் சூட்டை தணிக்கும்.
7. ஆஸ்துமா நோயின் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள் இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் அந்நோயிலிருந்து சீக்கிரம் விடுபட்டுவிடலாம்.
8. இந்த கீரையில் துவையல் செய்து, சூடாக சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் கலந்து சாப்பிட்டு வர மூக்கிலிருந்து வடியும் நீர் குறையும்.
9. முசுமுசுக்கை பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் இருமல் குணமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |