பூமியின் வளிமண்டலத்தில் வைர துகள்களை தெளிக்க விஞ்ஞானிகள் யோசனை! எதற்காக தெரியமா?
அதிகரித்து வரும் வெப்பநிலையில் இருந்து பூமியை பாதுகாக்க வைர தூசியை பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் முன்மொழிந்துள்ளனர்.
இந்த ஆய்வின் விவரங்கள் Geophysical Research Letters என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
பூமியின் மேல் வளிமண்டலத்தில் ஒவ்வொரு ஆண்டும் 5 மில்லியன் டன் வைரத் தூசியை (synthetic diamond dust) சிதறடிக்க விஞ்ஞானிகள் முன்மொழிந்துள்ளனர்.
இதனால் பூமியின் வெப்பநிலையை 1.6 டிகிரி செல்சியஸ் குறைக்க முடியும் என நம்புகின்றனர்.
பூமியின் மேல் வளிமண்டலத்தில் வைர தூசி சிதறிக்கிடந்தால், அது ஒரு கண்ணாடியைப் போல செயல்பட்டு, சூரியனின் கதிர்கள் பூமியில் விழுவதைத் தடுத்து, அதை மீண்டும் விண்வெளியில் பிரதிபலிக்கச் செய்யும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரிய கதிர்வீச்சு மேலாண்மை (S.R.M) என்பது விண்வெளியில் உள்ள எந்தவொரு பொருளும் சூரியனின் கதிர்களால் சிதறடிக்கப்பட்டு தடுக்கப்பட்டு பூமியின் வளிமண்டலம் குறைக்கப்படும் செயல்முறையாகும்.
கடந்த காலங்களில், சல்பர், கால்சியம், அலுமினியம், சிலிக்கான் போன்றவற்றை எஸ்.ஆர்.எம்-க்கு பயன்படுத்தலாம் என்று பல திட்டங்கள் இருந்தன.
இருப்பினும், இந்த நோக்கத்திற்காக வைர தூசி சிறப்பாக செயல்படும் என்று விஞ்ஞானிகள் சமீபத்தில் கூறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Spraying diamond dust to cool Earth, Diamond on earth atmosphere