Omicron வகை கொரோனா வைரஸ் பரவல்: கனேடிய பல்கலைக்கழகங்கள் எடுத்துள்ள முடிவு
Omicron வகை கொரோனா வைரஸ் உட்பட கொரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, சில கனேடிய பல்கலைக்கழகங்கள், புத்தாண்டில் வகுப்புகள் துவங்கும்போது, வகுப்புகளை ஒன்லைனில் நடத்துவது என முடிவு செய்துள்ளன.
குறிப்பாக, Simon Fraser பல்கலைக்கழகம், Northern B.C. பல்கலைக்கழகம் மற்றும் Victoria பல்கலைக்கழகம் ஆகியவை இந்த முடிவை எடுத்துள்ளன.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா பரவல் அதிகரித்து, அதிலும் Omicron வகை கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத்துவங்கியுள்ளதால், நேற்று இந்த அறிவிப்பை அந்த பல்கலைக்கழகங்கள் வெளியிட்டுள்ளன.
குறைந்தபட்சம், ஜனவரி 24 வரை மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு திரும்ப வாய்ப்பில்லை என அவை அறிவித்துள்ளன.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் முதன்முறையாக 2,046 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.