பரபரப்பான சூழலில் நிவாரண அறிக்கை வெளியிடும் நிதியமைச்சர் ரிஷி சுனக்
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட நெருக்கடியான சூழலை சமாளிக்கும் அழுத்தத்தில் நிதியமைச்சர் ரிஷி சுனக் தமது நிவாரணை அறைக்கையை வெளியிட்டுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக எரிபொருள் வரி லிற்றருக்கு 5p குறைக்கப்படும் என்றும், இந்த ஆண்டு பணவீக்கம் 7.4% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய- உக்ரைன் போரினால் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு, அதிக பணவீக்கம், அதிகரித்த உணவுச் செலவுகள் என கடுமையான நெருக்கடியின் மத்தியில் நிவாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் ரிஷி சுனக்.
பிரித்தானியாவில் பணவீக்கம் கடந்த 30 ஆண்டுகளில் அதிகபட்சமாக 6.2 சதவீதத்தை எட்டியது, இது ஆண்டின் பிற்பகுதியில் இன்னும் உயரக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான வரி செலுத்துவோருக்கு வருமான வரி விகிதம் 1p குறைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் ரிஷி சுனக் உறுதிப்படுத்தியுள்ளார். வருமான வரியின் அடிப்படை விகிதத்தில் மாற்றம் 2024 முதல் தொடங்கும்.
மேலும் அடிப்படை விகிதம் தற்போது 20p என உள்ளது, இது 19p என குறையும். வருமான வரிச் செயல்பாட்டின்படி, ஆண்டுக்கு £12,570 வரையிலான வருமானத்திற்கு வரி எதுவும் செலுத்த தேவையில்லை.
இதனால் பிரித்தானியா முழுவதும் 30 மில்லியன் மக்கள் பயன்பெறுவார்கள் எனவும், ஒவ்வொரு ஊழியரும் ஆண்டுக்கு சுமார் 330 பவுண்டுகள் வரையில் இதனால் ஆதாயம் அடைவார்கள் எனவும் ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய ஒற்றை தனிநபர் வரிக் குறைப்பு இதுவென அவர் தெரிவித்துள்ளார்.