48 மணிநேரத்திற்குள் 3000 விண்ணப்பங்கள்! அதிர்ச்சியில் ஐடி நிறுவன சிஇஓ
இணையதளத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட 48 மணிநேரத்திற்குள், 3000 விண்ணப்பங்கள் வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் ஒரு நிறுவனத்தின் சிஇஓ.
3000 விண்ணப்பங்கள்
தங்கள் வலைத்தளத்தில் வேலைவாய்ப்பு பதிவு செய்து 48 மணிநேரத்திற்குள் 3,000 ரெஸ்யூம்கள் வந்திருப்பதை ஸ்பிரிங்வொர்க் (SpringWork) நிறுவனத்தின் சிஇஓ வெளிப்படுத்தியுள்ளார்.
இது நாட்டில் வேலையின்மை மற்றும் நாடு முழுவதும் பாரிய பணிநீக்கங்களின் விளைவுகளைக் குறிக்கிறது.
Kartik Mandaville
ஸ்பிரிங்வொர்க்ஸின் நிறுவனரும், அதன் தலைமை தகவல் அதிகாரியுமான (CEO) கார்த்திக் மண்டவில்லே (Kartik Mandaville) இதில் ஆச்சரியமடைந்தது மட்டுமின்றி, வேலைவாய்ப்பு சந்தையின் நிலவரம் குறித்து அவர் கேள்வி எழுப்பியுளளார்.
பாரிய அளவில் பணிநீக்கம்
நாடு முழுவதும் பல டெக் நிறுவனங்கள் பாரிய அளவில் பணிநீக்க நடவடிக்கையை நடத்தியதற்குப் பிறகு இங்கு பலருக்கு வேலையில்லாமல் போனது குறிப்பிடத்தக்கது. அமேசான், மெட்டா, கூகுள், ட்விட்டர் போன்ற மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் லட்சக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன.
இதுவரை 12,500 விண்ணப்பங்கள்
இந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறானதா என்று கேட்டபோது, இந்த மாதம் முழுவதும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்தது என்று அவர் பதிலளித்தார். அந்த நிறுவனத்திற்கு இதுவரை 12,500 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
இவ்வுளவு விண்ணப்பங்கள் வந்ததற்கு எது காரணமாக இருக்கும் என்றால், விளம்பரம் செய்யப்பட்ட அனைத்து வேலைகளுக்கும் “நிரந்தரமாக வீட்டிலிருந்தே வேலை பார்க்கலாம்” என்ற வாசகம் தான் என ட்விட்டர் பயனாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுவே ஆன்-சைட்டாக இருந்தால் அவர்களால் எத்தனை பேர் விண்ணத்திருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஸ்பிரிங்வொர்க் நிறுவனம்
ஸ்பிரிங்வொர்க் நிறுவனத்தின் இணையதளத்தை பார்த்தால், அவர் கூறியது போல் விற்பனை, மார்கெடிங், தயாரிப்பு, தொழில்நுட்பம் என அனைத்து வேலைகளுக்கும் “நிரந்தரமாக வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் வசதி” உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வேலையும் வாழ்க்கையும் சமநிலையாக இருக்க வேண்டும் என்பதற்காக 2020-ம் ஆண்டு முதல் “வீட்டிலிருந்தே வேலை பார்க்கும்” அணுகுமுறையை பின்பற்றி வருகிறது ஸ்பிரிங்வொர்க் நிறுவனம். தற்போது இந்த நிறுவனத்தில் 200 பேர் பணியாற்றுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Springworks CEO Kartik Mandaville, 3000 Resumes In 48 Hours, Unemployment, Kartik Mandaville tweet, job openings, Work From Home jobs, Online Jobs, Tech Jobs Opening, remote jobs