சிறுநீர் பைக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்! மருத்துவமனையில் அவலம்
இந்திய மாநிலம் பீகாரில் உள்ள மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு சிறுநீர் பைக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில் பொருத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உபகரணம் பற்றாக்குறை
பீகார் மாநிலத்தில் ஜமுய் மாவட்டத்தில் சதார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சுயநினைவு இல்லாமல் நோயாளி ஒருவர் கால் எலும்பு முறிந்த நிலையில் கொண்டுவரப்பட்டார்.
பின்பு, மருத்துவமனையில் நோயாளியை பரிசோதித்த மருத்துவர்கள் அங்குள்ள ஊழியர்களிடம் சிறுநீர் பை பொருத்தும்படி கூறியுள்ளார்.
Istock
ஆனால் அவர்கள், உபகரணங்கள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையாக இருந்ததால் சிறுநீர் பைக்கு பதிலாக பிளாஸ்டிக் பாட்டிலை நோயாளிக்கு பொருத்தினர்.
மறுநாள் சிறுநீர் பைக்கு ஏற்பாடு
இந்நிலையில், நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனையில் உள்ள மேலிட பொறுப்பாளர்களை தொடர்பு கொண்ட போதும் அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை.
இதனையடுத்து, மறுநாள் காலையில் நோயாளிக்கு தேவையான உபகரணம் மற்றும் சிறுநீர் பைக்கு ஏற்பாடுகள் செய்து கொண்டுவரப்பட்டன.
இது குறித்து மருத்துவமனை தரப்பில் உபகரணம் மற்றும் மருந்து பொருள்கள் பற்றாக்குறையாக இருப்பதை தெரிவிக்கவில்லை என்று கூறினர். அதற்கு பின்பு தான் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் மருத்துவர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் நோயாளிக்கு சிறுநீர் பைக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில் பொருத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |