பிரித்தானிய பெண்களை தீவிரவாத அமைப்புக்கு கடத்துவதில் கனடாவுக்கு பங்கு?: சிக்கிய நபரால் பரபரப்பு
பிரித்தானியர்களை ஐ எஸ் அமைப்பில் இணைவதற்காக கடத்துவதில் கனடாவுக்கு பங்கிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இரு நாடுகளும் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு.
பிரித்தானியாவிலிருந்து ஐ எஸ் அமைப்புக்கு பிரித்தானிய பெண்களைக் கடத்தும் ஆபரேஷனில் கனேடிய உளவுத்துறைக்கு பங்கு இருப்பதாக, கைது செய்யப்பட்டுள்ள உளவாளி ஒருவர் தெரிவித்துள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய பள்ளி மாணவியான ஷமீமா பேகம் ஐ எஸ் அமைப்பில் சேருவதற்காக லண்டனிலிருந்து தனது சக மாணவிகள் இருவருடன் சிரியாவுக்கு ஓடினார். இப்போது, தான் பிரித்தானியாவுக்கு வர விரும்புவதாக தெரிவித்துள்ளார் அவர். அவரது சட்டத்தரணி, ஷமீமா சிரியாவுக்குக் கடத்தப்பட்ட ஒரு அப்பாவிப் பெண். அவள் கனேடிய உளவாளி ஒருவரால் கடத்தப்பட்டவர் என்று சொல்லி புதிய விடயம் ஒன்றை சொல்லியுள்ளார்.
ஆனால், அவர் சொல்வது உண்மையோ என்று என்று எண்ணும் வகையில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆம், ஷமீமா சிரியாவுக்குச் சென்றதைத் தொடர்ந்து, அவர் சிரியாவுக்கு செல்வதற்கு உதவி செய்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடைய பெயர் மொஹமத் அல் ரஷீத் (Mohammed Al Rasheed). அவர் துருக்கியில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கூறியுள்ள விடயங்கள் பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ரஷீத், புகலிடம் கோருவதற்காக ஜோர்டானிலுள்ள கனேடிய தூதரகத்துக்குச் சென்றாராம். அப்போது அங்குள்ள கனேடிய அதிகாரிகள், ஐ எஸ் அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து தங்களுக்கு தகவல்கள் கொடுத்தால் அவருக்கு கனேடிய குடியுரிமை பெற்றுத் தருவதாக கூறினார்களாம்.
அதன்படி, ஒரு பக்கம் பிரித்தானியாவிலிருந்து, பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளை சிரியாவுக்கு அழைத்துச் சென்ற இந்த ரஷீத், ஷமீமா பேகம் உட்பட, தான் அழைத்துச் செல்பவர்கள் இரகசியமாக வீடியோ எடுத்து, அவர்களுடைய பாஸ்போர்ட் முதலான ஆவணங்களை புகைப்படம் எடுத்து, அவற்றையெல்லாம் ஜோர்டானிலுள்ள கனேடிய தூதரகத்துடன் பகிர்ந்துள்ளார். மறுபக்கம், ஐ எஸ் அமைப்பினருடனும் தொடர்பில் இருந்துள்ளார்.
தற்போது அவர் கூறிய விடயங்கள் கனடா மற்றும் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஷமீமாவின் சட்டத்தரணியான Tasnime Akunjee, இந்த கடத்தல் விடயத்தில் கனடாவின் பங்கு இருப்பதை அறிந்து தான் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் நட்பு நாடான கனடா, அதன் மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக போர் நடைபெறும் ஒரு இடத்துக்கு பிரித்தானிய பெண்களை கடத்துவதற்கு உதவியுள்ளது தனக்கு அதிர்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கனடாவும் பிரித்தானியாவும் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தொடர்பில் தாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை என்பது தங்கள் நீண்ட கால கொள்கை என கூறிவிட்டன!