பிரித்தானியாவில் 18 பேரை கடித்த சம்பவம்! கருணை கொலை செய்யப்பட்ட அணில்
பிரித்தானியாவில் பொதுமக்கள் 18 பேரை தாக்கிய அணில் கருணை கொலை செய்யப்பட்ட சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் பிளின்ட்ஷயரில் உள்ள Buckley-ல் சாம்பல் அணில் ஒன்று கடந்த சில நாட்களில் 18 பேரை கடித்துள்ளது. இது குறித்து புகார் வந்த நிலையில், கால்நடை மருத்துவரால் இந்த அணில் பிடிக்கப்பட்டு, பிரித்தானியா சட்டப்படி கருணை கொலை செய்யப்பட்டுள்ளது.
இந்த வகை சாம்பல் அணிகள் கடந்த 1870-ஆம் ஆண்டு, அமெரிக்காவில் இருந்து பிரித்தானியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், இந்த அணில்கள் ஏற்படுத்திய பாதிப்புகளால், இதை காட்டுக்குள் விட பிரித்தானியா அரசு தடை விதித்தது.
இதனால் பிடிக்கப்படும் அணில்கள் கருணை கொலை செய்யப்பட்டு வருகிறது. அதன் படி தற்போது கருணை கொலை செய்யப்பட்டுள்ள இந்த அணில் பொதுமக்களை கடிக்க தொடங்கியுள்ளது.
இதனால் 18 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து அந்த அணிலை பொதுமக்கள் அளித்த புகாரால் கருணை கொலை செய்யப்பட்டது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், முதலில் எனது தோட்டத்தில் உள்ள தானியங்களை சேதப்படுத்தி வந்த அணில் திடீரென ஒருநாள் என்னை கடித்து விட்டது.
இதனால், எனக்கு காயம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து மற்றொருவர் கூறுகையில், முதலில் என்னை கடித்ததுடன் என்னை சந்திக்க வந்த எனது நண்பனையும் தாக்கியதால், வீட்டை விட்டு வெளியே செல்லவே பயமாக இருந்தது. இதன் காரணமாகவே, அணில் கடித்த சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டேன் என கூறியுள்ளார்.