எங்கு சென்றாலும் கூடவே வரும் அப்பு அணில்! பார்வையாளர்களை வியக்க வைத்த வீடியோ
அணில் ஒன்று நபர் ஒருவர் எங்கு சென்றாலும் கூடவே வரும் காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த பறந்து விரிந்த உலகில் அன்றாடம் ஏதாவது ஒரு வித்தியாசமான விஷயங்கள் நடைபெறுவது உண்டு. அதிலும் விலங்குகள் மனிதர்கள் மீது காட்டும் பாசம் அளவுக்கு மிஞ்சிய ஒன்று.
அந்த வகையில் மோட்டார் வாகனத்தில் தன் உரிமையாளருடன் அணில் பயணிக்கும் வீடியோ இணைய வாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை மாவட்டம் பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரி(32). தொழில்நுட்ப ஊழியராக வேலை செய்து வருகிறார். இதனிடையே, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவருடைய வீட்டில் அடிபட்ட நிலையில் குட்டி அணில் ஒன்று வந்துள்ளது.
அணிலின் காயத்தை பார்த்து ஹரி அதற்கு சிகிச்சை அளித்துள்ளார். அப்பொழுது அவர் தினமும் அந்த குட்டி அணிலுக்கு உணவளித்து வந்தார். பின்னர், அந்த அணிலுக்கு அப்பு என்றுபெயர் சூட்டியுள்ளார்.
இதனால், மிகுந்த பாசம் கொண்ட அந்த அணில், ஹரி எங்கு சென்றாலும் கூடவே பயணம் செய்ய துடிக்கிறது. அந்த வகையில் செல்லும் இடங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் ஜாலியாக ஏறி நகரை வலம் வரும் அணிலையும், ஹரியையும் பார்த்து அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து, அவர் தெரிவிக்கையில், ஒரு நாள் அடிப்பட்டு எங்கள் வீட்டுக்கு வந்த அணிலை நான் சிகிச்சை அளித்து பார்த்து வந்தேன். அதற்கு உணவு கொடுத்தும், பெயர் அளித்தும் கவனித்து வந்தேன்.
அன்றிலிருந்தே என்னுடன் பயணிக்கிறது. நான் உறங்கும்போதும், என்னுடனே உறங்கும், வாகனத்தில் வேகமாக சென்றால் சட்டை பட்டனை இறுக்கி பிடித்துகொள்ளும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.