இவர் தான் இந்திய அணியின் டாப் கிளஸ் பவுலர்! புகழ்ந்து தள்ளிய ஜவஹல் ஸ்ரீநாத்
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜவஹல் ஸ்ரீநாத் தான் பார்த்ததிலே சிறந்த பந்து வீச்சாளர் யார் என்பது குறித்து பேசியுள்ளார்.
வெளிநாட்டு மண்ணில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த 26-ஆம் திகதி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான மொகமது ஷமி மற்றும் பும்ரா ஆகியோர் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜவஹல் ஸ்ரீநாத் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் இந்திய பந்து வீச்சாளர்கள் பலரை பார்த்திருக்கிறேன், விளையாடியிருக்கிறேன். ஆனால் பும்ராவை தான் நான் சிறந்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் வைப்பேன். ஏனெனில் அவரின் பந்து வீச்சு அந்தளவிற்கு அற்புதமாக உள்ளது.
நிச்சயமாக அவர் ஹால் ஆப் பேம் பட்டத்தைப் பெறும் அளவிற்கு தற்போதே சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இன் ஸ்விங்கர், அவுட் ஸ்விங்கர், ஸ்லோவர் பால், யார்க்கர், பவுன்சர், ஸ்லோ ஷார்ட் பால், ஸ்லோ கட்டர் என அனைத்து விதமான பந்துகளையும் வீசுகிறார்.
அவர் பந்து வீசுவதை பார்ப்பதே தனி அழகாக உள்ளது. நிச்சயம் என்னை பொருத்தவரை இந்தியாவின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் என்றால் அது பும்ரா தான் என கூறியுள்ளார்.
நடைபெற்று முடிந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து, 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.