கவுதம் கம்பீர் என்னை அநாகரீகமாக தீட்டினார்: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த குற்றச்சாட்டு
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தன்னை அநாகரிகமான முறையில் திட்டியதாக ஶ்ரீசாந்த் வருத்துடன் தெரிவித்துள்ளார்.
கம்பீர்- ஶ்ரீசாந்த் வாக்குவாதம்
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கான லெஜண்ட் கிரிக்கெட் லீக் தொடர் கடந்த நவம்பர் 18ம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் கவுதம் கம்பீர் தலைமையிலான இந்தியா கேப்பிடல் அணிக்கும் பார்த்தீவ் படேல் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கும் இடையே சமீபத்தில் எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியா கேப்பிடல் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, ஆனால் போட்டியின் நடுவே கவுதம் கம்பீருக்கும், குஜராத் ஜெயன்ட்ஸ் அணியில் விளையாடிய ஶ்ரீசாந்த்-க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட ஶ்ரீசாந்த்
இந்நிலையில் ஶ்ரீசாந்த் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், கவுதம் கம்பீர் தன்னை மைதானத்தில் வைத்து தன்னை திட்டியதாகவும், FIXER(சூதாட்டக்காரர்) என கூறி 3 முறை திட்டியதாக ஶ்ரீசாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரிடம் மோசமாக நான் நடந்து கொள்ளாத நிலையிலும், கவுதம் கம்பீர் என்னை மிகவும் மோசமாக திட்டியதாகவும் இதனால் நானும் எனது குடும்பத்தினரும் மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Smile when the world is all about attention! pic.twitter.com/GCvbl7dpnX
— Gautam Gambhir (@GautamGambhir) December 7, 2023
இந்நிலையில் கவுதம் கம்பீர் அவரது எக்ஸ் தளத்தில், கவன ஈர்ப்பு நிறைந்த இந்த உலகில், புன்னகை செய்வோம் என பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து மீண்டும் இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோ வெளியிட்ட ஶ்ரீசாந்த், கவுதம் கம்பீரை சண்டைக்காரர் என விமர்சித்தார்.
அத்துடன் மைதானத்தில் அவர் சேவாக் போன்ற மூத்த வீரர்களை கூட அவமதித்ததாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Gautam Gambhir, Sreesanth, Legends League Cricket, India Capitals, Gujarat Giants,