IPL வரலாற்றில் நம்ப முடியாத வெற்றி! இமாலய இலக்கை துரத்தி பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.
பேட்டிங்கில் மிரட்டிய பஞ்சாப் கிங்ஸ்
நடப்பு ஐபிஎல் தொடரின் 27-வது லீக் ஆட்டம் ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 66 ஓட்டங்கள் குவித்தனர்.
Leading right from the front! 💥pic.twitter.com/DaAlWHN3WH
— Punjab Kings (@PunjabKingsIPL) April 12, 2025
பிரியான்ஷ் ஆர்யா 13 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்தும், பிரப்சிம்ரன் சிங் 23 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 82 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
பின்னர் கடைசி நேரத்தில் களத்திற்குள் புகுந்த ஸ்டாய்னிஸ் தன்னுடைய பங்கிற்கு 11 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 34 ஓட்டங்கள் குவித்தார்.
Everybody is a 𝐆𝐚𝐧𝐠𝐬𝐭𝐞𝐫, till you see the 𝐌𝐨𝐧𝐬𝐭𝐞𝐫! 💪🔥 pic.twitter.com/C1klAuKBn6
— Punjab Kings (@PunjabKingsIPL) April 12, 2025
இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 245 ஓட்டங்கள் குவித்தது.
நம்ப முடியாத வெற்றியை பதிவு செய்த சன்ரைசர்ஸ்
246 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்தனர்.
டிராவிஸ் ஹெட் 37 பந்துகளில் 66 ஓட்டங்கள் எடுத்தார். அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 10 சிக்ஸர் 14 பவுண்டரிகளுடன் 141 ஓட்டங்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார்.
சிக்சர்களும் பவுண்டரிகளும் பறந்த இந்த போட்டியை கிளாசன் தன்னுடைய கடைசி நேர அதிரடியுடன் நிறைவு செய்தார்.
𝘼 𝙣𝙤𝙩𝙚-𝙬𝙤𝙧𝙩𝙝𝙮 𝙏𝙊𝙉 💯
— IndianPremierLeague (@IPL) April 12, 2025
A stunning maiden #TATAIPL century from Abhishek Sharma keeps #SRH on 🔝 in this chase 💪
Updates ▶ https://t.co/RTe7RlXDRq#TATAIPL | #SRHvPBKS | @SunRisers pic.twitter.com/ANgdm1n86w
அத்துடன் நிர்ணயிக்கப்பட்ட இமாலய இலக்கை ஹைதராபாத் அணி 9 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |