காதலியின் முன் சதம் விளாசிய சன்ரைசர்ஸ் வீரர்: வெற்றிக்கு பிறகு குடும்பத்தை கிண்டல் செய்த ஹரி புரூக்
என் குடும்பத்தினர் இங்கே இருக்கின்றனர், என்னுடைய சதத்தை நினைத்து அவர்கள் பெருமையாக இருப்பார்கள் என கொல்கத்தா அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய சன்ரைசர்ஸ் வீரர் ஹரி புரூக் பேட்டியளித்துள்ளார்.
2023 ஐபிஎல்-லில் முதல் சதம்
ஐபிஎல்-லின் 19வது லீக் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே இன்று நடைபெற்றது.
இதில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஹரி புரூக், 55 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 12 பவுண்டரிகளை விளாசி 100 ஓட்டங்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
ஹரி புரூக்கின் இந்த அதிரடியான சதம் மூலம் நடப்பு 2023 ஐபிஎல்-லில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஹரி புரூக் பேட்டி
இந்த போட்டியில் ஹரி புரூக் சதத்தின் உதவியுடன் கொல்கத்தா அணியை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியின் வெற்றிக்கு பிறகு பேசிய சன்ரைசர்ஸ் வீரர் ஹரி புரூக், என்னுடைய காதலி இங்கே இருக்கிறார். ஆனால் என்னுடைய குடும்பத்தினர் அனைவரும் ஓய்வுக்காக வெளியேறிவிட்டனர், “எனக்கு தெரியும் அவர்கள் வெளியேறியதும் நான் ஓட்டங்கள் சேர்ப்பேன் என்று என புன்னகையுடன் தெரிவித்தார்.
ஆனால் அவர்கள் அனைவரும் எனது சதத்தை நினைத்து நிச்சயம் மகிழ்ச்சியடைவார்கள் என்று நம்புகிறேன் எனவும் ஹரி புரூக் தெரிவித்துள்ளார்.