சன்ரைசர்ஸ் தோற்றதும் திரும்பி நின்று அழுத காவ்யா மாறன்.., ஆறுதல் கூறிய அமிதாப் பச்சன்
ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்ததும் வருத்தமடைந்த காவ்யா மாறனுக்கு நடிகர் அமிதாப் பச்சன் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் அணி தோல்வி
ஐபிஎல் இறுதிப் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது.
Kavya Maran was hiding her tears. ?
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 26, 2024
- She still appreciated KKR. pic.twitter.com/KJ88qHmIg6
இதில்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியது. இந்த அணியானது வெற்றி பெற்றவுடன் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் முகத்தில் சந்தோஷத்தை பார்க்கவே தனி ரசிகர் கூட்டம் இருக்கும்.
இந்நிலையில், நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றவுடன், அந்த அணியை பாராட்டி காவ்யா மாறன் கைதட்டினார். அப்போது அவர், கமெராவுக்கு முகத்தை காட்டாமல் திரும்பி நின்று ஒரு நிமிடம் அழுதார்.
அமிதாப் பச்சன்
பாலிவுட் நடிகர் அமிகாப் பச்சன் தன் டெய்லி பிளாகில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர், "ஐபிஎல் இறுதிப் போட்டி முடிந்துவிட்டது, KKR மிகவும் உறுதியான வெற்றியைப் பெற்றுள்ளது.
சன்ரைசர்ஸ் அணி சிறப்பாக விளையாடி வந்த நிலையில் தோல்வி அடைந்ததை பார்க்க ஏமாற்றம் அளிக்கிறது.
மேலும், அந்த அணியின் உரிமையாளரான காவ்யா மாறன், தோல்விக்குப் பிறகு உணர்ச்சிவசப்பட்டு அழுது, கமராக்களில் இருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
அவரை நினைத்து வருத்தமாக உள்ளது. பரவாயில்லை. நாளை இருக்கிறது மை டியர். நம்பிக்கையை இழக்க வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |