SRH உரிமையாளர் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறனின் சொத்து மதிப்பு குறித்து இங்கே காண்போம்.
காவ்யா மாறன்
ஐபிஎல்லில் டி20யில் 2016ஆம் ஆண்டில் வெற்றிக்கு கிண்ணத்தை வென்ற அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
நடப்பு தொடரிலும் எதிரணிகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் விளையாடி வருகிறது. இந்த அணியின் உரிமையாளராக காவ்யா மாறன் இருக்கிறார்.
இவரது அணுகுமுறை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் மூலம் SRH சிறந்து விளங்குகிறது.
வணிகத்தில் நாட்டம்
அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்த காவ்யா மாறன், தனது தந்தை கலாநிதி மாறனைப் போல் வணிகத்தில் நாட்டம்கொண்டு சாதித்துள்ளார்.
இவர் தற்போது பணக்கார பெண்கள் பட்டியலில் முன்னணியில் உள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் Stern School of Businessயில் படித்தவர் காவ்யா மாறன்.
சன் குழுமத்தில் தனது பயணத்தைத் தொடங்கிய காவ்யா மாறன், சன் மியூசிக் மற்றும் சன் எஃப்எம் செயல்பாடுகளை திறமையாக நிர்வகித்தார்.
2019யில் சன் நெட்வொர்க் லிமிடெட்டின் இயக்குநர்கள் குழுவில் இடம்பிடித்த காவ்யா மாறன், தற்போது நிர்வாக இயக்குநராக உள்ளார்.
சன் நெட்வொர்க்கின் விரிவாக்கம் மற்றும் புதுமைகளை இயக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். அதேபோல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியை வாங்கிய இவர், தலைமை நிர்வாக அதிகாரியாக மாறினார்.
சொத்து மதிப்பு
போட்டி நிறைந்த சூழலில் விளையாட்டு உரிமையை மேற்பார்வையிடும் சவால்களையும் ஏற்றுக்கொண்டார். ஆனால், போட்டியின்போது அணி வீரர்களை கவனிக்கும் ரசிகர்கள் காவ்யா மாறனை கண்டதும் உற்சாகமடைந்து ரசிகர்களாகவே மாறியிருக்கிறார்கள்.
வணிகம் மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டிலும் சாதித்து காட்டியுள்ள காவ்யா மாறனின் நிகர சொத்து மதிப்பு ரூ.400 கோடி என்று கூறப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டின் பணக்கார பெண்கள் பட்டியலில் காவ்யா மாறன் இடம்பிடித்துள்ளார்.
காவ்யா மாறன் 4 முதல் 6 கோடி வரை மதிப்புள்ள Bentley Bentayga, 9.50 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் 8, BMW i7 மற்றும் Ferrari Roma ஆகிய சொகுசு கார்களை வைத்துள்ளார்.
அவரது தந்தை கலாநிதி மாறனின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.24,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |