விளாசிய தினேஷ் கார்த்திக்! இமாலய இலக்கை விடாமல் துரத்திய RCB: SRH த்ரில் வெற்றி!
நடப்பு ஐபிஎல் சீசனின் 30வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஹைதராபாத் ஆதிக்கம்
நாணயச் சுழற்சியில் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் (103) சதம் விளாசி அசத்த, நிக்கோலஸ் கிளாசன் (67) அரைசதம் கைக்கொண்டனர். அபிஷேக் சர்மா (34), எய்டன் மார்க்ரம் (34), அப்துல் சமாத் (37) ஆகியோரும் ஓட்டங்களில் பங்களித்தனர்.
இந்த வருட ஐபிஎல் தொடரில் ராய்ல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னைய சாதனையான 263 ஓட்டங்களை சன்ரைசர்ஸ் அணி மும்பைக்கு எதிரான போட்டியில் 277 ஓட்டங்கள் குவித்து முறியடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
We come out on top in a record-breaking game of cricket ?#PlayWithFire #RCBvSRH pic.twitter.com/f4uekgz5kW
— SunRisers Hyderabad (@SunRisers) April 15, 2024
இந்நிலையில், தன்னுடைய சாதனையை சில நாட்களிலேயே சன்ரைசர்ஸ் அணி 287 ஓட்டங்கள் குவித்து மீண்டும் முறியடித்துள்ளது.
RCB-வின் சவால்
288 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை விரட்டிய RCB அணி, 7 விக்கெட் இழப்புக்கு 262 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
Kohli (42) மற்றும் கேப்டன் Faf du Plessis (62) ஆகியோரின் தொடக்க ஜோடி 80 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கம் கொடுத்தாலும், அதன் பிறகு அணியின் பேட்டிங் தடுமாறியது.
தினேஷ் கார்த்திக் (83) ஓட்டங்கள் அடித்து தனி ராஜாவாக போராடினாலும், மற்ற வீரர்களால் அவருக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை.
Not many believed we could get anywhere close to the target but people in the dressing room did and DK didn’t let them down!
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 15, 2024
You’re a freak, DK. ?♂️#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #RCBvSRH pic.twitter.com/DAUfuT6YCN
ஹைதராபாத் அணி பந்துவீச்சில், கேப்டன் ,Pat Cummins(3/43) மற்றும் சுழற்பந்து வீச்சாளர் Mayank Markande (2/46) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.
தனது கடைசி ஓவரில் நடராஜன் (1/33) தினேஷ் கார்த்திக்கை ஆட்டமிழக்கச் செய்து, ஹைதராபாத்திற்கு வெற்றியை தேடி தந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |