திரும்ப வந்துட்டேன்னு சொல்லு - ஹைதராபாத் அணியில் இணையும் முக்கிய வீரர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் முன்னாள் தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஹைதராபாத் அணியும் இம்முறை எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என முடிவு செய்துள்ளது.
இதனிடையே முன்னாள் தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் மீண்டும் ஹைதராபாத் அணியில் இணைந்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் ஸ்டெயின் விளையாட வரவில்லை. பவுலிங் பயிற்சியளிக்க வந்துள்ளதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.
ஸ்டெயின் வருகை அந்த அணிக்கு நல்ல உத்வேகத்தை அளிக்கும். அவருடன் பயிற்சி எடுப்பதன் மூலம் புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக், நடராஜன், கார்த்திக் தியாகி ஆகியோர் தங்களது திறனை வளர்த்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.