கனடாவில் உயிரிழந்த இலங்கை தமிழர்! பிரபலம் வெளியிட்ட இரங்கல் செய்தி
ஸ்ரீ குகன் ஸ்ரீரிஸ்கந்தராஜா என்ற இலங்கை தமிழர் மறைவுக்கு கேரி அனந்தசங்கரி இரங்கல்.
வழிகாட்டி மற்றும் சமூகத் தலைவராக இருந்தார் என புகழாரம்.
கனடாவில் பிரபலமாக இருந்த இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்ததற்கு நாடாளுமன்ற உறுப்பினரான கேரி அனந்தசங்கரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதன்படி ஸ்ரீ குகன் ஸ்ரீரிஸ்கந்தராஜா என்ற நபர் சமீபத்தில் உயிரிழந்திருக்கிறார். அவர் ரொறன்ரோவில் உள்ள தமிழ் சமூகத்தினரின் குடியேற்றம், தொழிலாளர் நலன், இளைஞர்களை ஊக்குவிப்பது போன்ற வழிகாட்டுதல் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
அவர் சமீபத்தில் மறைந்த நிலையில் சக இலங்கை தமிழரும், நாடாளுமன்ற உறுப்பினருமமான கேரி அனந்தசங்கரி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரின் பதிவில், ஒரு நண்பர், வழிகாட்டி மற்றும் சமூகத் தலைவராக அவர் இருந்தார். அவர் அதிகாரத்திடம் உண்மையைப் பேசினார், கொள்கை ரீதியான போராட்டத்தில் ஒருபோதும் பின்வாங்கவில்லை. ஸ்ரீ அண்ணா உங்களை மிகவும் மிஸ் செய்வோம் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
An important reflection on a friend, mentor, and community leader. He spoke truth to power and never shied away from a fight on principle. You will be dearly missed Sri Anna. https://t.co/ANIQLhWaYf
— Gary Anandasangaree (@gary_srp) October 11, 2022