Emerging Nations Trophy: மகுடம் சூடிய இலங்கை மகளிர்படை..அயர்லாந்தை வீழ்த்தி அபாரம்
Sri lanka women beat ireland and win emerging trophy: மகளிர் அயர்லாந்து அணியை வீழ்த்தி இலங்கை அணி எமர்ஜிங் நேஷனஸ் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
ஐசிசி மகளிர் எமர்ஜிங் நேஷனஸ் கிண்ண இறுதிப்போட்டியில், இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி மகுடம் சூடியது.
எமர்ஜிங் நேஷனஸ் கிண்ண இறுதிப்போட்டி
இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான, ஐசிசி மகளிர் எமர்ஜிங் நேஷனஸ் கிண்ண இறுதிப்போட்டி அஜ்மானில் நடந்தது.
முதலில் ஆடிய அயர்லாந்து அணி 19.3 ஓவர்களில் 96 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அலானா டல்செல் 24 ஓட்டங்கள் எடுத்தார். சத்யா சந்தீபனி 4 விக்கெட்டுகளும், சேத்தனா விமுக்தி, சுகந்திகா குமாரி, நிமாஷா மீபேஜ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 12.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இமேஷா துலானி 25 பந்துகளில் 44 ஓட்டங்களும், சஞ்சனா கவிந்து 25 ஓட்டங்களும் விளாசினர். கியா மெக்கர்த்தி, கேரா முராரே தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
