நாடே எதிர்பார்த்த 2025 பட்ஜெட் - சிறப்பு நேரலை ஆரம்பம்!
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சற்று நேரத்திற்கு முன்பு பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
நாடே எதிர்பார்த்த 2025 பட்ஜெட்
இன்று (17) காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அதன்படி, நாட்டின் 79 வது வரவு செலவுத் திட்ட உரையான 2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு மசோதாவின் இரண்டாம் வாசிப்பு, நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி திசாநாயக்கவால் இன்று காலை 10.30 மணிக்கு உரை நிகழ்த்தப்பட்டு வருகிறது.
அதன் பின்னர், பிப்ரவரி 18 முதல் 25 வரை மொத்தம் ஏழு நாட்களுக்கு இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும்.
இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பிப்ரவரி 25 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும், இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் பிப்ரவரி 18 முதல் 25 வரை மொத்தம் ஏழு நாட்களுக்கு நடைபெறும்.
ஒதுக்கீட்டு மசோதா மீதான குழுநிலை விவாதம் பிப்ரவரி 27 முதல் மார்ச் 21 வரை நான்கு சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்கள் நடைபெறும்.
சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21 அன்று மாலை 6:00 மணிக்கு நடைபெறும்.
ஜனாதிபதியின் பட்ஜெட் உரையின் நேரடி ஒளிபரப்பிற்காக லங்காசிறி யூடியூப் செனலுடன் இணைந்திருங்கள்.
நேரலை
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |