தென் ஆப்பிரிக்காவுக்கு தரமான பதிலடி கொடுத்த இலங்கை அணி! 328 ரன் குவிப்பு
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 30 ஓட்டங்கள் முன்னிலை பெற்று 2வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி 358
செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடந்து வரும் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க முதல் இன்னிங்சில் 358 ஓட்டங்கள் எடுத்தது.
கைல் வெர்ரெய்ன்னே (Kyle Verreynne) 105 ஓட்டங்களும், ரியான் ரிக்கெல்ட்டன் (Ryan Rickelton) 101 ஓட்டங்களும் விளாசினார்.
அணித்தலைவர் டெம்பா பவுமா 78 ஓட்டங்கள் எடுத்தார். லஹிரு குமரா 4 விக்கெட்டுகளும், அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளும், விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் கருணரத்னே 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, தினேஷ் சண்டிமல் 44 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
நிசங்கா அரைசதம்
எனினும் நிதானமாக ஆடிய பதும் நிசங்கா (Pathum Nissanka) 157 பந்துகளில் ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 89 ஓட்டங்கள் விளாசினார்.
அதன் பின்னர் வந்த ஏஞ்சலோ மேத்யூஸ் 44 ஓட்டங்களும், கமிந்து மெண்டிஸ் 48 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆக, இலங்கை அணி 328 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
டேன் பீட்டர்சன் (Dane Peterson) 5 விக்கெட்டுகளும், மார்கோ ஜென்சென் மற்றும் மஹாராஜ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 30 ஓட்டங்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |