இலங்கை அணி முதல் நாளிலேயே 386 ஓட்டங்கள் குவிப்பு! சதம் விளாசிய வீரர்கள்
அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 386 ஓட்டங்கள் குவித்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி
காலேவில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இலங்கை அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 386 ஓட்டங்கள் குவித்துள்ளது.
Top knock from the skipper! ?#SLvIRE #LionsRoar pic.twitter.com/qbRumcDIXs
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) April 16, 2023
மிரட்டல் கூட்டணி
கேப்டன் திமுத் கருணரத்னே 179 ஓட்டங்களும், குசால் மெண்டிஸ் 140 ஓட்டங்களும் விளாசினர். இவர்களது கூட்டணி இரண்டாவது விக்கெட்டுக்கு 281 ஓட்டங்கள் குவித்தது. மெண்டிஸ் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் ஓட்டங்கள் எடுக்காமல் வெளியேறினார்.
Kusal Mendis departs after an excellent knock of 140. ?
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) April 16, 2023
Match Centre: https://t.co/h1a5jr3DFe#SLvIRE #LionsRoar pic.twitter.com/F1EVaDImES
அயர்லாந்து அணியின் தரப்பில் மார்க் அடைர், கேம்பர், ஒயிட் மற்றும் டாக்ரெல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இலங்கை அணியில் தினேஷ் சண்டிமல் 18 ஓட்டங்களுடனும், பிரபத் ஜெயசூர்யா 12 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.