இலங்கை காவல்துறையில் இதுவே முதல் முறை! 4 பெண்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு
இலங்கையில் காவல் துறையில் புதிதாக நான்கு பெண் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய காவல்துறை ஆணையம் வெளியிட்ட பட்டியலுக்கு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஒப்புதல் வழங்கியுள்ளார்.
பட்டியலின் அடிப்படையில், புதிய பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தர்ஷிகா குமாரி, பத்மினி வீரசூரிய, ரேணுகா ஜயசுந்தர மற்றும் நிஷானி செனவிரத்ன ஆகியோர் இந்த புதிய பொறுப்புகளை ஏற்க இருக்கின்றனர்.
பொலிஸ் களப்படை தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாக தர்ஷிகா குமாரி தற்போது பணியாற்றி வருகிறார்.
இவரை தொடர்ந்து களுத்துறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பத்மினி வீரசூரிய பொறுப்பு வகிக்கிறார்.
மேலும் ரேணுகா ஐயசுந்தர பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபராகவும், நிஷானி செனவிரத்ன மாநில சேவையில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |