549 ஓட்டங்கள் குவித்த இலங்கை: மேற்கிந்திய தீவுகளுக்கு தரமான பதிலடி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை 549 ஓட்டங்கள் குவித்தது.
குசல் மெண்டிஸ் 69
சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் டெஸ்டில், இலங்கை அணி இரண்டாவது நாளிலும் துடுப்பாட்டத்தில் மிரட்டியது.
குசல் மெண்டிஸ், சோனல் தினுஷா கூட்டணி 6வது விக்கெட்டுக்கு 143 ஓட்டங்கள் குவித்தது.
3 சிக்ஸர்களை பறக்கவிட்ட குசல் மெண்டிஸ் (Kusal Mendis) 69 ஓட்டங்களும், சோனல் தினுஷா (Sonal Dinusha) 92 ஓட்டங்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
549 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர்
இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 549 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஜேடன் சீல்ஸ், ஷமர் ஜோஸப் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 2ஆம் நாள் முடிவில் 58 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |