98 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை: சாய்த்த பாகிஸ்தானின் மூவர்
Sri lanka allout for 98 vs pakistan: பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட்டில் இலங்கை 98 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ராவல்பிண்டியில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தானின் மிரட்டலான பந்துவீச்சில் இலங்கை அணி 98 ஓட்டங்களுக்கு சுருண்டது.
குசல் மெண்டிஸ்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தைத் தொடங்கிய இலங்கை அணி விக்கெட்களை அடுத்தடுத்து இழந்தது.
ஓரளவிற்கு தாக்குப்பிடித்த அணித்தலைவர் குசல் மெண்டிஸ் (Kusal Mendis) 32 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
சுருண்ட இலங்கை
பின்னர் மிலன் (0), பிரபத் (3) சொற்ப ஓட்டங்களில் வெளியேற, சோனல் தினுஷா 21 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆமீர் ஜமால் பந்துவீச்சில் வெளியேறினார்.
கடைசி விக்கெட்டாக லஹிரு குமர டக்அவுட் ஆக, இலங்கை அணி 35.3 ஓவர்களில் 98 ஓட்டங்களுக்கு சுருண்டது.
