அவுஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய இலங்கையின் இருவர்! 485 ஓட்டங்கள் குவிப்பு
அவுஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்டில் இலங்கை ஏ அணி 485 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
நுவனிது சதம்
இலங்கை ஏ அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், இரண்டாவது டெஸ்ட் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இலங்கை ஏ அணியில் கமில் மிஷாரா 88 ஓட்டங்களுக்கு அவுட் ஆக, நுவனிது பெர்னாண்டோ மற்றும் பவன் ரத்னயாகே பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இருவரும் சதம் விளாச இலங்கை அணி 400 ஓட்டங்களை கடந்தது. நுவனிது பெர்னாண்டோ (Nuwanidu Fernando) 102 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
பவன் ரத்னாயகே 122 ஓட்டங்கள்
அதனைத் தொடர்ந்து பவன் ரத்னாயகே (Pavan Rathnayake) 122 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார். பின்னர் வந்த சோனல் தினுஷா 88 ஓட்டங்கள் எடுத்தார்.
சோஹன் டி லிவேரா 50 (68) ஓட்டங்களுடன் களத்தில் நிற்க, இலங்கை ஏ அணி 6 விக்கெட்டுக்கு 486 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலிய ஏ அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 379 ஓட்டங்கள் குவித்துள்ளது.
ஜேக் வெதரால்ட் (Jake Weatherald) 183 ஓட்டங்கள் விளாசினார். குர்டிஸ் பேட்டர்ஸன் 59 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
அணித்தலைவர் ஜேசன் சங்கா (Jason Sangha) 121 (206) ஓட்டங்களுடனும், ஒலிவர் பீக்கே 3 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |