Emerging T20 Asia Cup: பாகிஸ்தானை பந்தாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை அணி
Emerging ஆசியக்கிண்ண டி20 தொடரில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
ஓமைர் யூசுப் 68
முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் ஏ அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 135 ஓட்டங்கள் எடுத்தது.
தொடக்க வீரர் ஓமைர் யூசுப் 46 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் விளாசினார்.
இலங்கை வெற்றி
இலங்கை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய துஷன் ஹேமந்தா 4 விக்கெட்டுகளும், நிபுன் ரன்சிகா மற்றும் இஷான் மலிங்கா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 16.3 ஓவரில் 137 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
அஹான் விக்ரமசிங்கே 46 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்களும், லஹிரு உதார 20 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்களும் எடுத்தனர்.
Sri Lanka 'A' bowlers were on fire, restricting Pakistan 'A' to a modest 135 runs. 💥 Time to chase this down and secure our spot in the Men's T20 Emerging Teams Asia Cup final! 👊 #SLvWI pic.twitter.com/E0MZP9XTRi
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) October 25, 2024
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |