அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் விளாசிய இலங்கை வீரர்!
அவுஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இலங்கை ஏ அணி வீரர் சமரவிக்ரமா சதம் விளாசி அசத்தினார்.
இலங்கை ஏ - அவுஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹம்பன்டோடாவில் நடந்தது.
அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 379 ஒட்டாங்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிலிப் 94 ஓட்டங்களும், மெக் ஆண்ட்ரு 92 ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் மதுஷன்கா 4 விக்கெட்டுகளும், லக்ஷிதா மற்றும் லக்ஷன் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 274 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக நுவானிடு பெர்னாண்டோ 86 ஓட்டங்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 212 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
318 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இலங்கையில் தொடக்க வீரர் மினோத் பனுகா 87 ஓட்டங்கள் விளாசினார். ஆனால் ஏனைய வீரர்கள் ஒருபுறம் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, சதீர சமரவிக்ரமா நிலைத்து நின்று ஆடினார். 9வது விக்கெட்டாக அவுட் ஆன அவர், 146 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 105 ஓட்டங்கள் விளாசினார்.
Top Knock from #SLAvAUSA 1st Four-day:
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 19, 2022
Sadeera Samarawickrama, scored a gutsy ?, ended up with 105 runs which included 9 fours. ? pic.twitter.com/uj5zjV9NWN
இந்த டெஸ்ட் இரு அணியிலும் பல வீரர்கள் சதத்தை தவற விட்ட நிலையில், சமரவிக்ரமா மட்டும் சதமடித்து மிரட்டினார். இலங்கை அணி 249 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனதால், அவுஸ்திரேலியா அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.