இலங்கை சர்சதேச விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இந்திய, ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பு!
இலங்கை மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை னியார் துறை நிறுவனத்திடம் ஒப்படைக்கும் யோசனைக்கு இலங்கை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
இதன்படி, மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை Shaurya Aeronautics Pvt நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
Ltd of India மற்றும் Airports of Regions Management Company of Russia அல்லது அதனுடன் இணைந்த நிறுவனம் 30 வருட காலத்திற்கு வழங்கப்படவுள்ளது.
2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளைப் பயன்படுத்த ஆர்வமுள்ள தரப்பினரிடமிருந்து EOI களை அழைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த விமான நிலையமானது 209 மில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்டு 190 மில்லியன் டொலரை சீனாவின் எக்ஸிம் வங்கி அதிக வட்டிக்கு கடனாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |