இலங்கையில் வெகு விமர்சையாக நடந்த மாத்தளை அம்மனின் மாசி மக பஞ்ச ரத பவணி!
இலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் மாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோயிலின் கோபுரம் மற்றும் அதில் செதிக்கியுள்ள சிற்பங்கள் அனைத்தும் கண்ணை கவர்பவையாக காணப்படும்.
கட்டிடக்கலை
இக்கோயில் 9 நிலை ராஜகோபுரம் வடக்கு நோக்கி அமைந்துள்ளது.
கிழக்கு மற்றும் மேற்கு திசையில் மேலும் இரண்டு 3 நிலை ராஜகோபுரங்கள் உள்ளன.இக்கோயில் கருவறை மற்றும் பல்வேறு உற்சவர்கள் மற்றும் சுண்ணாம்பினால் செய்த படங்களை வைப்பதற்காக ஒரு பொதுவான மண்டபத்தை கொண்டுள்ளது.
வடக்குப் பக்க ராஜகோபுரம் 32 மீட்டர் அதாவது 108 அடி உயரத்தில் அம்மனின் பல்வேறு வடிவங்கள், சைவம் மற்றும் வைணவம் தொடர்பான புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் வரையப்பட்டுள்ளது.
உள்ளே இருக்கும் மண்டபத்தின் தூண்கள் பலவிதமான உருவங்களைக் கொண்டு வண்ணமயமாக வரையப்பட்டுள்ளன. இக்கோயிலில் சுமார் 1008 சுண்ணாம்பினால் வரையப்பட்ட படங்கள் உள்ளன.
பூஜைகள்
வழக்கமான பூஜைகள் தவிர, தமிழ் புத்தாண்டு, ஆடி மாத வெள்ளி, தீபாவளி, நவராத்திரி போன்ற அனைத்து இந்து பண்டிகை நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் ரத பவணி நடைபெறும்.
இலங்கையின் அனைத்து பாகங்களில் இருந்தும் மக்கள் அம்மனை தேடி வருவார்கள். நேத்தி வைத்து அம்மனை வழங்குவார்கள். தமிழ் சிங்களம் என்ற மதப்பாகுபாடின்றி அனைவரும் வழிப்பாடுவார்கள்.
அந்த வகையில் கடந்த பெப்ரவரி மாதம் 12ம் திகதி கொடியேற்றி நேற்று பஞ்சரத பவணி சிறப்பாக நடைப்பெற்றது. அம்மனின் தரசனத்திற்காக வந்த பெருங்கோடி மக்களின் படங்களை பார்க்கலாம்.