இதை மட்டும் செய்தால் இந்தியாவுக்கு இலங்கை அணி சவால் அளிக்கலாம்! இன்று 2வது டி20 போட்டி... ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Sri lanka cricket Indian cricket T20 Cricket
By Raju Jul 27, 2021 03:10 AM GMT
Report

இலங்கை - இந்தியா இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

தொடக்க ஆட்டத்தில் 164 ரன்கள் சேர்த்த இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் (50 ரன்), கேப்டன் ஷிகர் தவான் (46 ரன்) ஆகியோரின் பேட்டிங் நேர்த்தியாக இருந்தது. இதே போல் பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட் வீழ்த்தி கலக்கினார்.

ஹர்திக் பாண்ட்யாவின் பேட்டிங் இந்த தொடரில் பெரிய அளவில் இல்லை. அவர் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும்.

தொடக்க வீரர் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இதை மட்டும் செய்தால் இந்தியாவுக்கு இலங்கை அணி சவால் அளிக்கலாம்! இன்று 2வது டி20 போட்டி... ரசிகர்கள் எதிர்பார்ப்பு | Sri Lanka And India Second T20 Match Today Colombo

இதனால் அவர்கள் விரைவில் இங்கிலாந்துக்கு கிளம்ப இருக்கிறார்கள். எனவே இன்றைய ஆட்டத்தில் விளையாடி விட்டு கடைசி ஆட்டத்தில் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பந்து வீச்சை பொறுத்தவரை 20 ஓவர் உலக கோப்பை அணிக்கான இடத்துக்கு குறி வைத்துள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதில் தீவிரம் காட்டுவார்கள். 

தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியில் அனுபவ வீரர்கள் குறைவு. தொடக்க ஆட்டத்தில் கடைசி 15 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 126 ரன்னில் சுருண்டது.

இலங்கை அணி 20 ஓவர் தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

டாப்-3 பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் நிலைத்து நின்று சிறப்பாக ஆடினால் இந்தியாவுக்கு சவால் அளிக்கலாம்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு,

இந்தியா: பிரித்வி ஷா, தவான் (கேப்டன்), சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன், குருணல் பாண்ட்யா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்ரவர்த்தி.

இலங்கை: அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா, தனஞ்ஜெயா டி சில்வா, அசலங்கா அல்லது சமரவிக்ரமா, அஷென் பண்டாரா, ஷனகா, (கேப்டன்), ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, உதனா, சமீரா, அகிலா தனஞ்ஜெயா. 

இதை மட்டும் செய்தால் இந்தியாவுக்கு இலங்கை அணி சவால் அளிக்கலாம்! இன்று 2வது டி20 போட்டி... ரசிகர்கள் எதிர்பார்ப்பு | Sri Lanka And India Second T20 Match Today Colombo

 

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US