இந்திய கிரிக்கெட் அணியை துவம்சம் செய்யுமா இலங்கை? இன்று நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இலங்கை - இந்தியா மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் இன்று பிற்பகலில் நடைபெறவுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன.
இலங்கை கிரிக்கெட் அணியில் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, ஜூலை 13ஆம் திகதி தொடங்கவிருந்த ஒரு நாள் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் இன்று பிற்பகலில் தொடங்கி நடக்கவுள்ளது.
இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.