இலங்கை செல்ல இந்திய சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவை இல்லை!
மார்ச் 31 வரை இந்தியாவிற்கு இலவச விசா வழங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார்.
அதாவது இந்தியர்கள் இலங்கைக்கு வருவதற்கு இனி விசா தேவையில்லை. இந்தத் திட்டம் மார்ச் 31, 2024 வரை அமலில் இருக்கும்.
இந்தியாவுடன் சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் இலவச விசா வழங்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் 2 மில்லியன் மேலதிக சுற்றுலாப் பயணிகளை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலவச விசாவைத் தவிர, நாட்டின் சுற்றுலா மையங்களில் இ-டிக்கெட் முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது.
இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் 2 இலட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். தீவு நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் சுமார் 20% இந்தியர்கள். இலங்கையின் அந்நியச் செலாவணி வருமானத்தின் முக்கிய ஆதாரமாக சுற்றுலாத்துறை உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Sri Lanka announces visa-free entry for India, Sri Lanka visa-free entry for seven countries, sri lanka tourism, India Sri Lanka