ஜப்பானில் இலங்கை ஜனாதிபதி அநுர: பாதுகாப்பு அமைச்சருடன் முக்கிய விவாதம்
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணத்தில் டோக்கியோவின் இம்பீரியல் ஹோட்டலில் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் டி.எம். நகதானியை இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான பாதுகாப்பு விடயங்களின் தற்போதைய நிலையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளன.
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் டி.எம். நகதானியை உடனான இந்த சந்திப்பின் போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட இலங்கைத் தூதுக் குழுவினர் கலந்து கொண்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |